"Success is a journey, not a destination."

..love makes life beautiful..
"Strength is life, weakness is death.."- Swami Vivekananda

Thursday, 28 August 2014

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சியம் இழந்து விடாதீர்கள்



[1]. எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது இன்று சொல்லமாட்டார்.

[2]. உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.

[3]. எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை  இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும்  ஆழமாய் நேசிப்பார்.

[4]. மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.

[5]. உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.

[6]. உங்கள் முகம் சிரிப்பிழந்த  நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேளையிலும் கவனம் செல்லாது.

[7]. உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார். 

[8]. அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவர். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார். 

[9]. உங்களை தொலைவில்  இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும்  அழகாய் மொழி பெயர்ப்பார்.

[10]. உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய்   பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.

No comments:

Post a Comment